பெண்களைப் போன்று ஹை ஹீல்ஸ் அணிந்து செல்லும் ஆண்: சொன்ன ஆச்சர்ய காரணம்

Report Print Santhan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண் தன்னுடைய அலுவலகத்திற்கு கடந்த ஒரு ஆண்டுகளாக ஹை ஹீல்ஸ்களை அணிந்து செல்வது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்தவர் Ashley Maxwell-Lam. உலகப்புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவர் கடந்த 1 ஆண்டாக தன்னுடைய அலுவலகத்திற்கு 6 இன்ச் ஹை ஹீல்ஸை அணிந்து செல்கிறார்.

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, இதைப் பற்றி வெட்கப்படவோ, ரகசியமாக சொல்லவோ வேண்டிய அவசியமில்லை எனவும் ஒருநாள் நான் அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த போது, என்னுடைய ஷு-வை காணவில்லை.

நான் என்னுடைய தங்கையின் ஹை ஹீல்சை அணிந்து சென்றேன். ரோட்டில் நான் நடந்து சென்ற போது என்னை அனைவரும் ஒரு வித்தியாசமாக பார்த்தனர். நான் அவர்களை கடந்து சென்ற போதும், அவர்கள் என்னை திரும்பி திரும்பி பார்த்தனர்.

இது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது, அதன் காரணமாகவே தொடர்ந்து ஹை ஹீல்சை அணிய ஆரம்பித்தேன் என்று கூறியுள்ளார்.

இதைத் தவிர அவரது ஆடைவடிவமைப்பாளர் ஷு-வை விட உங்களுக்கு ஹீல்ஸ் தான் அழகாக இருக்கிறது என்று கூறியுள்ளதால், அவர் தொடர்ந்து அலுவலகத்திற்கு ஹீல்ஸ்களையே அணிந்து சென்று வருகிறார்.

இதனால் மிகவும் பிரபலமாகியுள்ள அஸ்லீ மெக்ஸ்வெல்லம்மை உள்ளூர் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பேட்டி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்