சொகுசு வாழ்க்கைக்காக சிறுவன் செய்த செயல்: மனம் உடைந்த தாய்

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 12 வயது சிறுவன் தனது தாயின் கிரெடிட் கார்டை திருடி அதன் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எம்மா என்பவரது 12 வயது மகன் தாமஸ் அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வந்துள்ளான். பள்ளி சென்ற இச்சிறுவன் வீடு திரும்பவில்லை, எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் சிறுவன் இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனது தாயின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி விமான டிக்கெட் புக் செய்துள்ளான்.

விமானத்தின் மூலம் பாலி தீவிற்கு சென்ற இச்சிறுவன் அங்கு உள்ள சொகுசு ஒட்டலுக்கு சென்று ரூம் ஒன்றை புக் செய்துள்ளான். ஒட்டல் ஊழியர்கள் இவனது பாஸ்போர்ட் மற்றும் இவனது மாணவர் அடையாள அட்டையை மற்றும் சரிபார்த்துள்ளனர்.

மேலும், தனது சகோதரியும் இங்கு வருகிறார் என்றும் அவர் வருவதற்கு முன்னால் நான் இங்கு வந்துவிட்டேன் என பொய் கூறியுள்ளார். இதனால் இவனுக்கு ரூம் ஒதுக்கப்பட்டது.

4 நாட்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளான். பின்னர் திரும்பி வருவதற்கு வழி தெரியாமல் இருந்துள்ளது. இதற்கிடையில் காணாமல் போன தனது மகன் இந்தோனேஷியாவில் இருப்பதா தாய் எம்மாவுக்கு தகவல் கிடைத்ததையடுத்து அவர், இந்தோனேஷியா சென்று தனது மகனை அழைந்து வந்துள்ளார்.

எனது மகன் இவ்வாறு செய்துள்ளது என்னால் நம்ப இயலவில்லை. அவனது இந்த செயலால் நான் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்