மூன்று வயது குழந்தையைக் காப்பாற்றிய வளர்ப்பு நாய்

Report Print Trinity in அவுஸ்திரேலியா

புதருக்கு நடுவில் சிக்கிக் கொண்ட மூன்று வயது குழந்தையை இரவு முழுதும் பாதுகாத்த நாயை அவுஸ்திரேலிய பொலிசார் மதிப்பிற்குரிய பொலிஸ் நாய் எனப் பெயரிட்டு பாராட்டி வருகின்றனர்.

அவுஸ்திரேலியா குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த மூன்று வயது குழந்தை அரோரா விளையாடிய படியே வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறது.

குழந்தையைக் காணாத அதன் உறவினர் குழந்தையைப் பல்வேறு இடங்களில் தேடிக் கொண்டிருந்தனர்.

குழந்தை வெளியே செல்லும்போதே அதனை பின் தொடர்ந்து சென்றிருந்த அவர்களது வளர்ப்பு நாய் மாக்ஸ் குழந்தையின் அருகிலேயே இருந்து இரவு முழுவதும் காவல் காத்துள்ளது.

அவர்களின் வீட்டிலிருந்து 2கிமீ தூரத்தில் அரோராவின் குரல் கேட்டதாக அரோராவின் பாட்டி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து குரல் வந்த திசையான மலையை நோக்கி சென்றிருக்கிறார் அந்தப் பாட்டி. அரோராவை அழைத்தபடி சென்றபோது அவரது குரல் கேட்ட மாக்ஸ் அவரை குழந்தையிடம் அழைத்து சென்றதாக கூறினார் பாட்டி.

குளிர் காரணமாக குழந்தை பாறை ஒன்றின் அடியில் தங்கியிருந்தது எனவும் மாக்ஸ் அரோராவின் அருகிலேயே இருந்தது எனவும் கூறினார்.

இந்தக் குழந்தையை தேடும் பணியில் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள்,மற்றும் அவசர காலப் பணியினர் ஈடுபட்டிருந்த நிலையில் மாக்ஸ்சின் பாசத்தால் குழந்தை விரைவாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

மூன்று வயதுக் குழந்தை குளிரில் எப்படி பயந்து இருக்கும் என்பதை தன்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது என்கிறார் பொலிஸ் அதிகாரியான கிரேக் பெர்ரி.

அரோராவிற்கு அருகிலேயே இருந்து இரவு முழுதும் பாதுகாத்த 17 வயதாகும் மாக்ஸ்க்கு காது மட்டும் கண்பார்வை குறைவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செயல் மூலம் மாக்ஸ்சின் குடும்பம் மட்டுமல்லாது போலீசார் மற்றும் சமூக ஊடக மக்கள் அனைவரும் மாக்ஸின் பாசத்தைப் பாராட்டி வருகின்றனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்