4 பிள்ளைகளின் தாயாருக்கு மரண தண்டனை விதித்த மலேசிய நீதிமன்றம்: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

மலேசியாவில் போதை மருந்து கடத்தியதாக கூறி அவுஸ்திரேலிய தாயார் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியரான Maria Elvira Pinto Exposto என்பவரே மலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்.

கடந்த டிசம்பர் மாதம் இவர் மீதான குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் தாமாகவே முன்வந்து குறித்த வழக்கை மறு விசாரணை செய்து அதில் மரண தண்டனையும் விதித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலா லம்பூர் விமான நிலையத்தில் வைத்து Exposto கைது செய்யப்பட்டார்.

4 பிள்ளைகளுக்கு தாயாரான இவரது பயண பெட்டியில் இருந்து 1.1 கி.கிராம் போதை மருந்து பொட்டலத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இணையம் வாயிலாக ஏற்பட்ட நட்பின் காரணமாக தாம் ஏமாற்றப்பட்டதாக 54 வயதான Exposto அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மலேசிய உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் அரசாங்கம் குறித்த வழக்கை மேல்முறையீடு செய்து 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்பியது.

அதில், 50 கிராம் அளவுக்கு தடை செய்யப்பட்ட போதை மருந்து பொட்டலங்களை எடுத்து வந்தால் கூட மலேசிய சட்டங்களின்படி குற்றமாகும்.

குறித்த குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கப்படும். தற்போது மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள Exposto பிணையில் வெளியே வந்தாலும், மலேச்சியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மீண்டும் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...