அதிர்ஷ்டசீட்டில் விழுந்த 55 மில்லியன் டொலர் பரிசினை 6 மாதங்களாக கண்டுகொள்ளாமல் இருந்த நபர்

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

மெல்போர்னில் அதிர்ஷ்டலாப சீட்டில் விழுந்த 55 மில்லியன் டொலர் பணம் இதுவரை கேட்பாரற்று கிடந்த நிலையில், அந்த சீட்டுக்கு உரிமையாளர் சுமார் 6 மாதங்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

Brunswick பகுதியில் செயல்பட்டு வரு Scole Lotto and News என்ற அதிர்ஷ்டலாப சீட்டு கடையில், சீட்டு வாங்கிய நபர் ஒருவருக்கு 55 மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ளது.

குறித்த பரிசுத்தொகையை வென்றவர் யார் என்பது கடந்த 6 மாதங்களாக தெரியவரவில்லை. வெல்லப்பட்ட தொகையை 6 மாதங்களுக்குள் யாரும் உரிமைகோராவிட்டால் அதனை விக்டோரியாவின் State Revenue-விடம் ஒப்படைக்க வேண்டும் என்பது சட்டமாகும்.

இதன்படி குறித்த பரிசுத்தொகை விக்டோரியா State Revenue-விடம் ஒப்படைக்கப்படுவதற்கு 7 நாட்களுக்கு முன்னதாக வெற்றியாளர் தகுந்த ஆதாரத்தைக் காட்டி பரிசுத்தொகையை பெற்றுக்கொண்டுள்ளார்.

இருப்பினும் வெற்றியாளர் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்