அவுஸ்திரேலியாவில் கூகுள் உட்பட சமூகவலைத்தளங்களுக்கு அறிமுகமாகும் புதிய சட்டம்

Report Print Givitharan Givitharan in அவுஸ்திரேலியா

அதிகரித்த இணையப் பாவனையின் காரணமாக தகவல் களாவடப்படல், தவறான வழிகளில் பயன்படுத்தப்படல் போன்று பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன.

இதனை தடுக்கும் வகையில் சர்வதேச சட்டங்களும், நாடுகளுக்கு உள்ளேயாயான சட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இயற்றப்பட்ட சட்ட விதிகளை மேலும் இறுக்கமாக்குவது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது.

குறித்த சட்ட இறுக்கத்தினுள் பேஸ்புக், கூகுள் மற்றும் வாட்ஸ் ஆப் போன்றன அகப்படவுள்ளன.

தரவுப் பரிமாற்றத்தின்போது அவற்றினை என்கிரிப்ட் செய்து பரிமாற்றுவது தொடர்பாகவே புதிய சட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டிஜிட்டல் யுகத்தில் புதிய சட்டங்கள் அவசியம் என அவுஸ்திரேலியாவின் சட்ட அமுலாக்க மற்றும் சைபர் பாதுகாப்பு அமைச்சர் Angus Taylor தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்