பத்து நிமிடங்கள் விடாமல் சண்டையிட்ட பாம்புகள்: ஆச்சரிய வீடியோ

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் Cooroy பகுதியில் இரண்டு பாம்புகள் விடாமல் தொடர்ந்து பத்து நிமிடங்கள் சண்டையிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும் இரண்டு பாம்புகள் விடாமல் சண்டையிடுகின்றன.

பின்னர் மூன்றாவது மாடியிலிருந்து தரையில் விழுந்த பின்னரும் அவை தங்கள் சண்டையை விடாமல் தொடர்ந்துள்ளன.

ஒரு பெரிய பாம்பு தனது வாலின் உதவியால் தொங்கிக் கொண்டிருக்க, சிறிய பாம்பு ஒன்று அதன் உடல் மீதே சுற்றிக் கொண்டு அதனுடனேயே சண்டையிடுகிறது. பெரிய பாம்பின் பிடி நழுவ இரண்டும் கீழே விழுகின்றன.

Gillian Bradley என்பவர் Cooroyயிலுள்ள தனது வீட்டில் இந்த காட்சியை படம் பிடித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்