அவுஸ்திரேலியாவில் இருந்து வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழர்கள் அதிரடி கைது

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா
199Shares
199Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியாவில் உள்ள முகாம்களில் தங்கியிருந்த சுமார் 10 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்ட நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பதும் குறைந்தபட்சம் ஒருவர் சிங்களவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு கொழும்புவுக்கு விமானம் மூலம் வந்த நிலையில் குடும்பத்தினருடனும், சட்ட ஆலோசகர்ளுடனும் தொடர்பு கொள்ளவில்லை.

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோர சென்ற அவர்கள் உடனடியாக இலங்கை பொலிசால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்