ஐயோ என்னை விட்டுவிடுங்கள்... கதறி அழுத மாற்றுத்திறனாளி இளம்பெண்! கொடூர சம்பவம்

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை 6 மணிநேரமாக துன்புறுத்தி, 65 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றில் தூக்கி கொலை செய்ய முயற்சித்துள்ள கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த Kayla Kendrigan என்ற 19 வயது இளம்பெண் பிறக்கும்போதே இடது கை இல்லாமல் பிறந்துள்ளார்.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது வேகமாக அங்கு வந்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேர், அவரை மிரட்டி காரில் கடத்தி கொண்டு 60 கி.மீ தூரம் வரை சென்றுள்ளனர்.

பின்னர் அந்த பெண்ணை அடித்து, தீயினால் சுட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதில் வலி தங்க முடியாமல் அந்த பெண், என்னை விட்டு விடுங்கள் என கதறி அழுதுள்ளார். ஆனால் அந்த இரக்கமற்றவர்கள் 6 மணி நேரமாக Kayla-வை கொடுமைப்படுத்தி 65 அடி உயரமுள்ள பாலத்திலிருந்து கீழே உள்ள நதியில் தூக்கி எறிந்துள்ளனர்.

ஒரு கையை மட்டுமே வைத்துக்கொண்டு அந்த பெண் நீந்தி கரையை சேர்ந்ததும், பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் Kayla-வை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் Kayla-வின் முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தையல் போடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் Matthew Leuthwaite, 22, மற்றும் Brooke Brown, 19 ஆகியோரை ஜாமீனில் விடுத்த நீதிமன்றம், நவம்பர் 23-ல் மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட 17 மற்றும் 16 வயதுள்ள சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

இதில் ஒருவர் Kayla-வின் முன்னாள் காதலர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்