இளம்பெண் மசாஜ் என ஆசைப்பட்டு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய இளைஞர் ஒருவர், மசாஜ் அறைக்குள் நுழைந்துவிட்டு திரும்பிய போது உடல் முழுவதும் சிகப்பு நிறத்திலான கோடுகள் விழுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

தெற்கு அவுஸ்திரேலியாவை சேர்ந்த Matthew, தன்னுடைய மனைவி Candise Raison மற்றும் அவருடைய சகோதரியுடன் 6 நாள் சுற்றுப்பயணமாக இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளார்.

அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அசதியில் இருவரும் மசாஜ் செய்தால் சற்று நிம்மதியாக இருக்கும் என நினைத்துள்ளனர்.

மேலும் நீண்ட நாட்களகாவே முதுகுவலி இருப்பதாக Matthew கூறி வந்ததால் அவருக்கு வலி குறையும் என நினைத்து Candise மசாஜ் செய்ய அழைத்து சென்றுள்ளார்.

அங்கு Candise முதலில் மசாஜ் செய்து முடித்துவிட்டார். பின்னர் மசாஜ் செய்யும் ஊழியர் Matthew-விற்கு 'red dragon' மசாஜ் செய்யலாமா என கேட்டுள்ளார். அந்த வகையான மசாஜ் என்ன என்பதே இருவருக்கும் தெரியாத நிலையில், என்னுடைய கணவர் எதுவாக இருந்தாலும் முயற்சி செய்வார் என தெரிவித்துள்ளார்.

அதன்படி அவருக்கு மசாஜ் முடிந்ததும், இந்த வகை சிகிச்சையானது குவா ஷா என்று அழைக்கப்படுகிறது. தசை திசுக்களிலிருந்து அசுத்தங்களை வெளியிட வடிவமைக்கப்பட்டுள்ளது. நாளைக்கு தான் red dragon தெரியும் என ஊழியர் கூறியுள்ளார்.

அதற்கு அடுத்த நாளே Matthew-வின் கழுத்து பகுதியில் இருந்து முதுகு முழுவதும் சிகப்பு நிறத்திலான கோடுகள் விழுந்துள்ளார். இதனால் பார்த்து குடும்பமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஆனால் அடுத்த 5 நாட்களில் இந்த கோடுகள் மறைந்துவிட்டதாக Candise கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்