அவுஸ்திரேலியாவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பிரித்தானியருக்கு நேர்ந்த துயரம்

Report Print Kabilan in அவுஸ்திரேலியா
378Shares

பிரித்தானியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அவுஸ்திரேலியாவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடல் பாம்பு தீண்டியதில் மரணமடைந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் வடக்கு பகுதியான Groote Eylandt தீவுக்கு அருகில், பிரித்தானியாவைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்.

இரைக்காக வீசிய வலையை அவர் இழுத்தபோது, கடல் பாம்பு ஒன்று அவரை தீண்டியது. அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர உதவிக்குழு, குறித்த இளைஞரை காப்பாற்ற முயன்றது.

ஆனால், அந்த இளைஞர் பரிதாபமாக மரணமடைந்தார். அவுஸ்திரேலியாவில் கடல் பாம்பு தீண்டியதில் நபர் ஒருவர் மரணிப்பது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய தூதரக செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,

‘மரணமடைந்த பிரித்தானியரின் குடும்பத்திற்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். அவர்களை தொடர்பு கொள்ள அவுஸ்திரேலிய அதிகாரிகளை நாடியுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

பொதுவாக கடல் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டவை. ஆனால், அவற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகவும் அரிது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்