கைகள் கட்டப்பட்ட நிலையில் அரைநிர்வாணமாக இறந்து கிடந்த பெண்ணின் இறுதி நிமிடங்கள்

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் அரைநிர்வாணமாக இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த Nicole Cartwright என்ற 30 வயதான பெண் கடந்த 3-ம் தேதியன்று கைகள் இரண்டும் தலைமேல் கட்டப்பட்டு, அரைநிர்வாண உடையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவருடைய உடலில் ஏராளமான காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதற்கான காரணம் மற்றும் குற்றவாளி குறித்து எந்தவித தடயமும் கிடைக்காததால் பொலிஸார் திணறி வருகின்றனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார், செப்டம்பர் 30-ம் தேதியன்று ரயிலில் Nicole பயணம் செய்த வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், Nicole கடந்த 30-ம் தேதியன்று Bondi Junction, St Marys, Strathfield, Central, Ashfield மற்றும் Museum stations வழியாக பயணம் செய்துள்ளார். அதன் பிறகு 3 நாட்கள் கழித்து தான் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அதன்பின்ன அவர் எங்கே சென்றார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இவரை யாரேனும் பார்த்திருந்தால் தகவல் தெரிவிக்கும்படி பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்