பாட்டியின் இளம் காதலனால் பேத்திக்கு நடந்த கொடுமை: 10 ஆண்டுகள் சிறை

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா
193Shares

அவுஸ்திரேலியாவில் பாட்டி ஒருவர் தனது பேத்தியை அவரது காதலன் பாலியல் வன்கொடுமை செய்வதற்கு உறுதுணையாக இருந்து அது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துகொண்ட குற்றத்திற்காக அவருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, பாட்டி ஒருவர் தனது இளம் வயது காதலரை வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

வீட்டுக்கு வந்த காதலன், பாட்டியின் பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். இதற்கு பாட்டி உறுதுணையாக இருந்ததையடுத்து, அந்த இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பேத்தி, இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தால் அவர் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த பாலியல் வன்கொடுமையின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பாட்டி தனது காதலனுடன் பகிர்ந்துகொண்டதையடுத்து, அவரது மகன் மூலம் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, பாட்டி மீது பொலிசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து அவர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்ததையடுத்து, பாட்டிக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், காதலனுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்