தொப்புள் கொடியில் மில்க் ஷேக்! லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரசவம் பார்க்க உதவும் தாதிப்பெண் ஒருவர், பிரசவித்த பெண்களின் தொப்புள் கொடியிலிருந்து மில்க் ஷேக், முகத்தில் பூசும் கிரீம்கள், மாத்திரைகள் மற்றும் நினைவுப் பொருட்கள் செய்து விற்பனை செய்வதன் மூலமே ஆண்டொன்றிற்கு 15,000 டொலர்கள் வரை சம்பாதிக்கிறார்.

Melbourneஐச் சேர்ந்த Ciara Noble (23), குழந்தை பெற்ற அம்மாக்களிடமிருந்து தொப்புள் கொடிகளை உடனடியாக பெற்றுக் கொண்டு, அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவற்றை கேப்சூல்களாகவும், முகத்தில் பூசும் கிரீம்களாகவும், மில்க் ஷேக்காகவும் செய்து கொடுக்கிறார்.

சிலருக்கு இதைக் கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கலாம், ஆனால் அது இயற்கையான மற்றும் அருமையான ஒரு விடயம் என்கிறார்.

நான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதும், தொப்புள் கொடியை, மாத்திரைகளாக மாற்றி உட்கொள்வதின் நன்மைகள் குறித்து கேள்விப்பட்டேன்.

தொப்புள் கொடியிலிருந்து கேப்சூல்கள் செய்வதுதான் தன்னை பிரபலப்படுத்தியதாக தெரிவிக்கும் Ciara, அவை சக்தி அளிக்கவும் ஹார்மோன்களை சம நிலப்படுத்தவும், குழந்தை பிறந்தபின் இரத்தம் வெளியேறுவதைக் குறைக்கவும் பால் சுரப்பதை அதிகரிக்கவும் உதவுவதாகத் தெரிவிக்கிறார்.

தொப்புள் கொடியை சேகரித்ததும் அவைகளை துண்டுகளாக்கி, அவற்றை உலர் பழங்கள் போலாக்கி, ஒரு மிக்சியில் போட்டு பவுடராக்கி, என்னிடம் இருக்கும் ஒரு கருவியின் உதவியால் அதை சிறு கேப்சூல்களுக்குள் அடைக்கிறேன் என்கிறார் Ciara. சில பெண்கள் சுவையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க ஸ்ட்ராபெரி போன்ற வாசனையையும் சேர்ப்பதாகவும் தெரிவிக்கிறார் அவர்.

தொப்புள் கொடியில் மில்க் ஷேக் செய்வதற்கு, உறைய வைத்த ஆரஞ்சுகள், வாழைப்பழங்கள், ஸ்ட்ராபெரி பழங்கள், தேங்காய் தண்ணீர் ஆகியவற்றுடன் ஒரு துண்டு தொப்புள் கொடியையும் சேர்த்து மில்க் ஷேக் செய்வேன் என்கிறார் Ciara.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...