சுற்றுலா சென்ற இடத்தில் வேறு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த காதலன்: பழிவாங்க காதலி செய்த காரியம்

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் வேறு பெண்ணுடன் காதலன் நெருக்கமாக இருப்பதை பார்த்து காதலி அதிர்ச்சியடைந்துள்ளார்.

இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியை சேர்ந்த 20 வயதான எமிலி வில்சன் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில், 3 வருடங்கள் சுற்றுலா பயணமாக அவுஸ்திரேலியாவிற்கு தன்னுடைய காதலனுடன் சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு தன்னுடைய காதலன் ஸ்னாப்சாட் அப்ளிகேஷனில் வேறு ஒரு புதிய கணக்கு உபயோகிப்பதை கண்டறிந்து, அதனை ஆய்வு செய்துள்ளார்.

அதில் சுற்றுலா வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தன்னுடைய காதலன் வேறு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் காதலனுடைய செல்போனை ஆய்வு செய்தபோது அதில், பல பெண்களுடன் அவர் பேசியிருப்பதை பார்த்துள்ளார்.

இதனால் மனமுடைந்த எமிலி காதலனை பழிவாங்க நினைத்து, அவர் பெண்களுடன் பேசியிருக்கும் புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் மற்ற பெண்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

அவருடைய இந்த பதிவினை பார்த்த இணையதளவாசிகள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அதில் ஒரு ஆண்களே இப்படி தான், நம்பக்கூடாது என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers