7 வயது மகனுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் கிண்டலுக்கு ஆளான தாய்: கொடுத்த பதிலடி

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் ஆட்டிசம் நோய் பாதிக்கப்பட்ட 7 மற்றும் 4 வயது பிள்ளைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து வரும் தாய் கிண்டலுக்கு ஆளான நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

லிசா பிரிட்ஜர் என்ற பெண்ணுக்கு சேஸ் (7) மற்றும் பீனிக்ஸ் (4) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இருவருமே ஆட்டிச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இருவருக்கும் தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்த வண்ணம் இருக்கிறார் லிசா.

இதையடுத்து இணையபயன்பாட்டாளர்கள் லிசாவை மோசமாக விமர்சித்தும் கிண்டலடித்தும் வருகிறார்கள்.

இதற்கு பதிலடி கொடுத்து பேசிய லிசா, நான் தாய்ப்பால் கொடுத்தால் என் மகன்கள் அமைதியாக உள்ளார்கள்.

இதில் தவறேதும் கிடையாது, இது இயற்கையான விடயம் தான் என நினைக்கிறேன்.

இதை பாலியல் ரீதியான விடயமாக சிலர் சித்தரிப்பது மனதுக்கு வேதனையாக உள்ளது.

என் இரண்டு பிள்ளைகளும் எல்லோரையும் போல சாதாரண வாழ்க்கையை வாழ வேண்டும் என்றே விரும்புகிறேன் என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers