இலங்கைக்கு சுற்றுலா வந்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய குடும்பம்: அடுத்து நேர்ந்த பரிதாபம்

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரண்டு பிள்ளைகள் தங்களது பெற்றோருடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் இருவரும் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிள்ளைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசிகளை பெற்றோர் போடாத நிலையிலேயே தட்டம்மை நோய் அவர்களுக்கு வந்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா வந்த அவுஸ்திரேலிய குடும்பம் கடந்த 11-ஆம் திகதி சிட்னி நகரை வந்தடைந்தனர்.

சிங்கப்பூர் வழியாக அவர்கள் சிட்னிக்கு வந்தனர். அந்த சமயத்தில் தான் இரண்டு பிள்ளைகளுக்கு தட்டம்மை நோய் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து நியூ சவுத் வேல்ஸின் சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தட்டம்மை நோய் பாதிக்கப்பட்ட அந்த இருவருடன் நேரடி தொடர்பில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

வேறு யாருக்கேனும் அதன் அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனையை நாடுங்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும், காய்ச்சல், கண்வலி, இருமல் தொடர்ந்து இருந்தாலோ மற்றும் உடலில் அரிப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் வடுக்கள் காணப்படுவதும் தட்டம்மையின் அறிகுறிகள் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers