மார்பகம் பெரிதாக இருப்பதால் அவமானமாக இருந்தது: சின்னதாக மாற்றிய அழகிக்கு நேர்ந்த கதி

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் Melissa George என்ற மொடல் அழகி தனது மார்பகம் பெரிதாக இருப்பதால் அவமானப்பட்டு அதனை அறுவை சிகிச்சை செய்து சின்னதாக்கியதால், தற்போது பக்கவிளைவுகளை சந்தித்து வருகிறார்.

விளையாட்டு மேடைகள் மற்றும் ஆடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும்போது எனது மார்பகம் பெரிதாக இருப்பதால் எனக்கு அவமானமாக இருந்தது.

குறிப்பாக, விளையாட்டு மேடைகளில் நிற்கும்போது நான் அணிந்திருக்கும் ஆடை எனக்கு பிட்டாக இருந்தாலும், மார்பகம் பெரிதாக இருந்ததால், அந்த பகுதி மட்டும் தனியாக தெரிந்து சரியான உடல் அமைப்பை காட்டாது.

இதனால், எனது பயிற்சியாளரின் அறிவுரைப்படி 10 ஆயிரம் பவுண்ட் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்து மார்பகத்தை சிறிதாக்கினேன். அறுவை சிகிச்சை செய்து 5 மாதங்கள் கழித்து இவருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது.

எந்த வகை உணவு சாப்பிட்டாலும் அழற்சி, புண்கள் ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அடிக்கடி மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளதால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுக்கும் அளவுக்கும் சென்றுவிட்டதாக அழகி தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers