ஆன்லைன் காதலனை தேடி கண்டம் விட்டு கண்டம் பறந்த இளம்பெண்: அதன்பின் நடந்த கொடூர சம்பவம்

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

ஆன்லைன் மூலம் சந்தித்த காதலனை தேடி கண்டம் விட்டு கண்டம் பறந்த அவுஸ்திரேலிய இளம்பெண், பட்டினி போட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமையான சம்பவத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த லாரா ஹால் (30) என்கிற பெண் ஆன்லைனில் சஜ்ஜத் என்கிற நபரை சந்தித்து நட்பை வளர்க்க ஆரம்பித்துள்ளார்.

தன்னிடம் பெரிய வீடு இருக்கிறது எனவும், அதில் இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழலாம் என சஜ்ஜத் கூறியிருக்கிறார்.

அதனை நம்பிய லாரா, தன்னுடைய சகோதரனுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக சஜ்ஜத் கூறியதை கேட்டு பாகிஸ்தானின் லாகூருக்கு புறப்பட்டுள்ளார்.

அங்கு சென்ற அவர், சஜ்ஜத்தின் வீட்டை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த வீட்டில் இருந்த 5 அறைகளில் 20 பேர் தங்கியிருந்தனர்.

அதனை சமாளித்துக்கொண்டு லாரா அங்கேயே தங்க ஆரம்பித்துள்ளார். இதற்கிடையில் அவருடைய 30 நாள் விசா முடிந்ததால், வெளியில் சென்றால் பொலிஸ் கைது செய்துவிடுவார்கள் என நினைத்து வீட்டிற்குள்ளேயே முடங்க ஆரம்பித்துள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சஜ்ஜத், காதலை கூறி, முஸ்லீம் மதத்திற்கு மறுமாறு லாராவை வற்புறுத்தியுள்ளான்.

ஆனால் இதற்கு லாரா மறுத்ததால் கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளான். தினமும் பட்டினிபோட்டு துஸ்பிரயோகம் செய்துள்ளான். 14 மணிநேரதிற்கு ஒருமுறை என சாப்பாடு கொடுத்து சித்ரவதை செய்துள்ளான்.

இதற்கிடையில் லாராவிடம் நாப்கின் இல்லாததால், பெரும் அவஸ்தையடைந்துள்ளார். இதிலிருந்து தப்ப முடிவெடுத்த லாரா, பாகிஸ்தானில் உள்ள அவுஸ்திரேலியா தூதரகத்தை தொடர்பு கொண்டு முறையிட்டுள்ளார்.

ஆனால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அதிகாரிகள், மந்தமான பதிலை கொடுத்ததோடு, அங்கிருந்து தப்பி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடுங்கள் என அறிவுரை மட்டும் வழங்கியுள்ளனர்.

அதன்பிறகு பேஸ்புக்கில் சில நண்பர்கள் மற்றும் தொழிலதிபர்களின் உதவியை லாரா நாடியுள்ளார். அவர்களின் மூலம் அங்கிருந்து மீட்கப்பட்ட லாரா, பாகிஸ்தானில் உள்ள பிரித்தானிய கிறிஸ்தவர் சங்க தொண்டு நிறுவனம் மூலம் நிதி பெற்றுக்கொண்டு அங்கிருந்து தன்னுடைய வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவமானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், லாராவிற்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers