கழிவறையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு: உள்ளே சென்ற பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் கழிவறையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு, பெண்ணின் பின் பகுதியை கடித்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஹெலன் ரிச்சர்ட்ஸ் என்கிற 59 வயது பெண், கழிவறைக்கு சென்று அதன் மீது அமர்ந்துள்ளார்.

அப்போது திடீரென ஏதோ ஒன்று பின் பக்கத்தை கடிப்பதை உணர்ந்த அவர், அதிலிருந்து குதித்து வேகமாக எழுந்து நின்று உள்ளே எட்டி பார்த்துள்ளார்.

அதனுள் 5 அடியில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து பயத்தில் உறைந்துள்ளார். உடனே பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் இடத்திற்கு வந்த பாம்பு பிடிக்கும் நபர், லாவகமாக அதனை பிடித்து சென்றார்.

அங்கு தப்பிக்க இடம் எதுவும் இல்லாத காரணத்தால், அவர் வரும் வரை பாம்பு அந்த இடத்திலே இருந்தது.

பாம்பு விஷம் இல்லாத வகையை சேர்ந்ததால், எந்தவித அசம்பாவிதத்திலும் சிக்காமல் ஹெலன் தப்பித்துக்கொண்டார்.

ஆனால் முன்னெச்செரிக்கைக்காக மட்டும் விஷ முறிவு ஊசி போட்டுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்