வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் அவுஸ்திரேலிய நகரங்கள்! தீவிர மீட்பு நடவடிக்கையில் மீட்புக்குழு

Report Print Kabilan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் பல நகரங்களில் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

அவுஸ்திரேலியாவில் வட கிழக்கு பகுதியில் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து விட்டது.

இதன் காரணமாக அவுஸ்திரேலியாவின் 22 நகரங்கள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளன. குறிப்பாக குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

alliance/dpa/A.Rankin

இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பெரும்பாலானவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

alliance/dpa/A.Rankin

ராக்ஹாம்டன் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 77 ஆயிரம் பேர், படகு மூலம் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். மேலும் அந்நகரில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. அத்துடன் ரயில் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

இந்நிலையில் பொலிசாரும், ராணுவத்தினரும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த மழை வெள்ளம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் மேலும் சில நாட்களுக்கு இந்த வெள்ளத்தினால் பாதிப்பு இருக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers