மகளையே காதலனுக்கு இரையாக்கிய தாயின் இரட்டை வேடம்! தலைமறைவான காதலன்

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்த Therese Butler(48) அவரது அக்கப்பக்கத்தாரிடையே பிரபலமான ஒரு கௌரவமான பெண்மணி.

தான் செய்யும் கேக்குகளாலும், தனது பேரக்குழந்தைகள் குறித்து அவ்வப்போது வெளியிடும் பேஸ்புக் இடுகைகளாலும் பிரபலமானவர்.

அவரது கேக்குகளை விரும்பும் மக்கள், அவரது உடல் நல பிரச்சினைகளுக்காக அவர் மீது பரிவு காட்டுவர்.

ஆனால் அவருக்கு இன்னொரு கோர முகம் இருப்பதை, அவரே சொல்லும்வரை யாரும் அறியவில்லை.

ஒரு நாள் அவர், தனது மகள் Peta Butlerஇடம் கடந்த காலத்தில் நடந்த தனது மனத்தை உறுத்திக் கொண்டிருந்த ஒரு சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

Thereseக்கு Thommo என்னும் ஒரு ஆன்லைன் காதலன் இருந்தார்.

இருவருக்கும் மிக அந்தரங்கமான உறவு இருந்த நிலையில், ஒரு நாள் Thommo, Therese இளமையாக இருக்கும்போது அவருடன் உறவு கொண்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்ற தனது ஆசையை வெளியிட, சற்றும் தயங்காத Therese பயங்கரமான ஒரு காரியத்தை செய்தார்.

தனது மகள் Petaவை Toowoomba என்ற இடத்திற்கு சுற்றுலா செல்வதாக அழைத்துச் சென்று, ஒரு ஹோட்டல் அறையில் அவளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குவதற்காக Thommoவை அனுப்பினார்.

அறைக்குள் தான் பெற்ற மகளை, தனது காதலன் வல்லுறவுக்குள்ளாக்க, வாசலில் உட்கார்ந்திருந்த Therese, புகை பிடித்துக் கொண்டிருந்தாராம்.

இதுவரை யாரோ ஒருவரால் தனது இளம் வயதில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக எண்ணிக்கொண்டிருந்த Peta, தனது தாயே தான் துஷ்பிரயோகம் செய்யப்படக் காரணம் என்பதை அறிந்து கடும் அதிர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளானார்.

பின்னர் ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்ட Peta பொலிசாரிடம் தனது தாய் குறித்து புகாரளித்தார்.

பொலிசார் Thereseஐக் கைது செய்து சிறையில் அடைத்தாலும் Thommo பொலிசாரின் பிடியில் இதுவரை சிக்கவில்லை.

பொலிசார் தொடர்ந்து அவனை தேடி வருகின்றனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்