மெல்போர்னை உலுக்கிய மாணவி கொலை...இறப்பதற்கு முன் பாலியல் சித்ரவதை: வெளியான தகவல்

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட 21 வயதான இஸ்ரேல் மாணவி விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த 21 வயது மாணவியான அயா மாசர்வே மெல்போர்னில் உள்ள 'தி லா ட்ரோப்' பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார்.

இவர் கடந்த மாதம் 18 ஆம் திகதி தன் சகோதரியுடன் போனில் பேசிக்கொண்டு சென்றபோது, அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

புதிய குரல்களை போன் மூலம் கேட்ட அயாவின் சகோதரி ஏதோ விபரீதம் என்பதை அறிந்து போலீசாருக்கு தகவல்கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அயா படிக்கும் பல்கலைக்கழகத்தின் அருகில் அவரது உடலை மீட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 20 வயது நபரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், மாணவி Aya Maasarwe படுகொலை செய்யப்பட்டது தொடர்பான முழுமையான விவரங்கள் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. மாணவியின் தந்தை Saeed Maasarwe அந்த விவரங்களின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் ஆஸ்திரேலியாவின் சட்ட நிறுவனம் உதவி செய்வதாக அறிவித்துள்ளது.

மேலும், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி அதன் பின்னர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது,

மது அருந்தியிருந்த அந்த நபர், மாணவியை பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கி கொலை செய்துள்ளார் என இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers