'நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை': நொறுங்கிய இதயத்துடன் கடிதம் எழுதிய சிறுவன்

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 7 வயது சிறுவன் தன்னுடைய ஆசிரியருக்கு தற்கொலை கடிதம் ஒன்றினை எழுதியிருக்கிறான்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜாக் வில்கின்சன் என்கிற 7 வயது சிறுவன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சக வகுப்பு தோழர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் குறித்து கூறியிருக்கும் அவருடைய தாய் ஸ்டர்கெஸ், என்னுடைய மகனுக்கு anxiety disorder என்னும் நோய் இருந்ததால் எப்பொழுதும் பதற்றத்துடனே காணப்படுவான்.

முதல் வகுப்பில் படிக்கும் போது சக மாணவர்கள், அவனை பைத்தியம் என அழைப்பார்கள்.

இரண்டாம் வகுப்பு சென்றதும், அத்துமீறி அவன் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.இதனால் என்னுடைய மகன் பெரும் கவலையுடனே இருந்து வந்தான். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவனுடைய பள்ளி தோழன், 10 நிமிடங்கள் விடாமல் தாக்கியிருக்கிறான்.

பிளாஸ்டிக் கத்தியை கண்டு அவனுடைய பின்பக்கமாக குத்தியுள்ளான். நான் வழக்கம் போல என்னுடைய மகனை அழைத்து வருவதற்காக பள்ளிக்கு சென்றேன். அவன் என்னை பார்த்ததும் ஓடி வந்து கட்டியணைத்தபடியே அழ ஆரம்பித்துவிட்டான்.

உடனே நான் அவனுடைய பின்பக்கம் பார்க்கும் போது குத்தப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. அதனை பாத்ததும் என்னுடைய கண்களில் இருந்து நீர் வர ஆரம்பித்துவிட்டது. இனிமேல் பள்ளிக்கு போக மாட்டேன் என அழுதுகொண்டிருந்தான்.

சில நாட்கள் கழித்து அவனுடைய அறையை நான் சோதனையிடும் போது, 'நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை' என அவன் தலையணையில் எழுதியிருந்தான்.

அடுத்த சில நாட்கள் கழித்து அவனுடைய பள்ளி ஆசிரியைக்கு ஒரு தற்கொலை கடிதம் எழுதியிருப்பதை கண்டறிந்தேன். அந்த கடிதத்தில், "கடவுளே, தயவு செய்து என்னை எடுத்துக்கொள்" என எழுதியிருந்தான்.

அப்பொழுதிலிருந்து என்னுடைய மகனை நான் முழுவதும் பொறுப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன்.

பிரச்சனைகளை சமாளிப்பதற்கான சிகிச்சைக்கு அவனை உட்படுத்தினேன். ஜாக்கிற்கு படம் வரைவது மிகவும் பிடிக்கும். நான் வைத்துள்ள டி-ஷர்ட் நிறுவனத்தில் அவன் வரையும் படங்களை அச்சசிட்டு, ஒரு இணையதளத்தின் மூலம் அதனை விற்பனை செய்ய ஆரம்பித்தேன். அதில் வரும் பணத்தின் மூலம் அவனுடைய சிகிச்சையை கவனித்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers