உடற்பயிற்சி கூடத்தில் திடீரென மாரடைப்பால் துடித்த இளம்பெண்! பதற வைக்கும் வீடியோ

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் உடற்பயிற்சி கூடத்தில் திடீரென மாரடைப்பால் துடித்த பெண்ணை சுற்றியிருந்த இளைஞர்கள் வேகமாக ஓடிவந்து காப்பாற்றும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த எமிலி கவுண்டர் (21) என்கிற இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் துடித்து கீழே விழுந்தார். இதனை பார்த்து பதறிப்போன உரிமையாளர் ஆரோன் பேட்டர்சன் மற்றும் ஜிம் உறுப்பினர் பென் டஃபி ஆகியோர் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

வீடியோவை காண...

அங்கு 3 நாட்களாக கோமா நிலையில் இருந்த எமிலிக்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், பெல்ட்-வைட்-காரன்லாண்ட் சிண்ட்ரோம் (BWGS), என்கிற ஒரு அபூர்வமான இதய நோயால் எமிலி பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

குழந்தை முதலே இருந்த இந்த நோயினை சரியாக கண்டறியாமல் விட்டதால் 21 வயதில் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட எமிலி கூறுகையில், சம்பவம் நடைபெற்ற அன்று உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பே ஒரு அசாதாரண நிலையை நான் உணர்ந்தேன். திடீரென எனக்கு மூச்சுவிட சிரமப்பட்டேன்.

மருத்துவமனையில் எனக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இதயம் மாற்றப்பட்டது. 4 மாத ஓய்விற்கு பின் மீண்டும் தற்போது உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்