பிறந்து ஒரு மாதத்திற்கு பிறகு முதல் முறை சந்தித்த இரட்டைக் குழந்தைகள் செய்த ஆச்சரிய செயல்: அபூர்வ புகைப்படம்!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் குறை பிரசவத்தில் பிறந்து, பிறந்ததும் பிரிக்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள் ஒரு மாதத்திற்குப்பின் சந்தித்த நிலையில், அவை செய்த செயல் ஒன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ann LePoon என்னும் இளம்பெண் கர்ப்பமுற்றபோது, 10ஆவது வாரத்தில் அவரது கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருப்பது தெரிய வந்ததோடு, அவை இரண்டும் ஒரே பனிக்குடத்திற்குள் இருப்பதும் தெரியவந்தது.

சாதாரணமாக 37 முதல் 42 வாரங்களில் பிரசவம் ஏற்படும் நிலையில், 29 வாரங்கள் இருக்கும்போதே Ann இரட்டைக் குழந்தைகளை பிரசவித்தார்.

குழந்தைகள் இருவரும் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சொல்லப்பட்ட நிலையிலும், இரண்டு குழந்தைகளும் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டனர்.

மருத்துவர்களின் கணிப்பையும் மீறி மிக நேர்த்தியாக வளர்ந்த ஒலிவியா, ஜோ, என பெயரிடப்படிருந்த அந்த இரண்டு குழந்தைகளும் ஒரு மாதத்திற்குப்பின் தன் தாயிடம் கொண்டு வரப்பட்டார்கள்.

முதலில் ஒலிவியாவை Ann மார்பில் கிடத்திய தாதியர், பின்னர் ஜோவை அவர் மார்பில் கிடத்தியபோதுதான் அந்த ஆச்சரிய சம்பவம் நடந்தது.

ஜோ தன் கையை நீட்டி தன் அருகில் இருந்த ஒலிவியாவை அணைத்துக் கொண்டாள். ஒரு மாதத்திற்கு முன் சந்தித்த குழந்தைகள் இருவரும், மீண்டும் சந்தித்ததும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டதைக் கண்டதும் தன்னால் கண்ணீரை அடக்க முடியாமல் ஓவென அழுதுவிட்டதாகத் தெரிவிக்கிறார் Ann.

Ann குடும்பம் வெளியிட்டுள்ள புகைப்படத்தைப் பார்க்கும்போதே கட்டியணைத்துக் கொண்டிருக்கும் சகோதரிகள் இருவருக்கும் உள்ள பாசப்பிணைப்பை நிச்சயம் நன்கு உணர முடிகிறது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்