குழந்தைகளுடன் அவுஸ்திரேலிய சிறையிலிருக்கும் இலங்கை தமிழ் குடும்பம்: ஆதரவாளர்களின் வித்தியாசமான நடவடிக்கை

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

2 மாதங்களுக்குமுன் தங்கள் குழந்தைகளுடன் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு இலங்கை தமிழ் தம்பதியர் இன்னும் சிறையில் இருக்கும் நிலையில், அவர்களை விடுவிக்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் வித்தியாசமான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

குயின்ஸ்லாந்திலுள்ள Biloela என்னும் சிறு கிராமத்தில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பிரியா, நடேசலிங்கம் தம்பதியர் மற்றும் அவர்களது பிள்ளைகள் கோபிகா மற்றும் தருணிகா ஆகியோர் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

அவர்களது தற்காலிக விசா காலாவதியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் காவலில் வைக்கப்பட்டு ஓராண்டான நிலையில், செவ்வாயன்று Biloela கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுக்கு ஆதரவாக வித்தியாசமான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

பிரியா, நடேசலிங்கம் தம்பதியின் இரண்டு குழந்தைகளும் இன்னும் சிறையில்தான் இருக்கிறார்கள் என்பதை நினைவுபடுத்தும் வகையில், பிரபல நாளிதழ் ஒன்றில் பிரியா, நடேசலிங்கம் குடும்பம் குறித்து கொடுக்கப்பட்டிருந்த விளம்பரம் ஒன்றை பதாகைகளில் ஒட்டி அவற்றை ஏந்திக் கொண்டு சாலையில் இறங்கினார்கள்.

இதன்மூலம் அனைத்து அவுஸ்திரேலியர்களையும், குறிப்பாக குயின்ஸ்லாந்துக்காரர்களை, அந்த குடும்பத்தை விடுவித்து அவர்கள் வாழ்ந்த Biloelaவுக்கே திரும்ப அனுமதிக்குமாறு தங்கள் பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுபினர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பிரியா, நடேசலிங்கம் குடும்பத்தை விடுவிக்கக்கோரி மனு ஒன்றில் 180,000 பேர் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து அந்த நாளிதழ் விளம்பரம் வெளியானது. பிரியா, நடேசலிங்கம் இருவரும் இலங்கை உள்நாட்டுப்போரையடுத்து தனித்தனியே 2012 மற்றும் 2013இல் அவுஸ்திரேலியா வந்தார்கள்.

அவுஸ்திரேலியாவில்தான் கோபிகா மற்றும் தருணிகா என்னும் இரண்டு குழந்தைகள் அவர்களுக்கு பிறந்தார்கள்.

அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் அவர்கள் சித்திரவதை செய்யப்படலாம் என்ற அச்சம் இருப்பதாக அவர்களது ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இலங்கைக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து பிரியா, நடேசலிங்கம் தம்பதி தொடர்ந்த வழக்கையும் ஃபெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

என்றாலும், பிரியா, நடேசலிங்கம் தம்பதி அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்திற்கு ஒரு சிறப்பு விடுப்பு விண்ணப்பம் அளித்ததன்பேரில், உள்துறை அமைச்சகம் அவர்களை நாடு கடத்தாமலிருப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்