தந்தையிடம் கடைசியாக பேசிய வார்த்தை: அவுஸ்திரேலியாவில் இளம் இந்திய மருத்துவர் கொலையில் வெளியான புதிய தகவல்

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மருத்துவர் கொலை வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ப்ரீத்தி ரெட்டி சிட்னியில் உள்ள மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

மார்ச் 4 ஆம் திகதி 32 வயதான ப்ரீத்தி ரெட்டி காணாமல் போய் 3 நாட்கள் கழித்து அவரது காரிலேயே சடலமாக மீட்கப்பட்டார்.

ப்ரீத்தி மற்றும் ஹர்ஸவர்தன் ஆகிய இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இடையில் இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து பிரிந்துவிட்டனர்.

இதற்கிடையில் தான் காதலன், ப்ரீத்தியை திட்டமிட்டுகொலை செய்துவிட்டு தானும் காரை மோதி விபத்தை ஏற்படுத்தி உயிரை மாய்த்துக்கொண்டார். இந்நிலையில் இந்த கொலை தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற ப்ரீத்தி தனது காதலனுடன் சிட்னி ஹொட்டலில் தங்கியுள்ளார். காலை உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு, நான் விரைவில் வீடு திரும்பிவிடுவேன் என 1.46 மணியளவில் தெரிவித்துள்ளார்.

தான் தங்கியிருந்த ஹொட்டலில் இருந்துதான் இந்த தொலைபேசித்தொடர்புகளை ப்ரீத்தி தனது தொலைபேசியிலிருந்து மேற்கொண்டுள்ளார், இதன்போது அவருடன் இருந்த காதலன் அதனை ஒட்டுக்கேட்டுள்ள காதலன் ஹர்ஷா அதன்பின்னர்தான் பலமுறை கத்தியால் குத்தி ப்ரீத்தியை கொலையை செய்துள்ளார்.

அதன்பின்னர், ப்ரீத்தின் சடலத்தை சூட்கேஸில் அடைத்து உதவியாளரின் உதவியுடன் வெளியே கொண்டு வந்த ஹர்ஷா, அவரது காருக்கு வைத்துவிட்டு சுமார் ஏழு கிலோ மீற்றர் தொலைவில் சென்று காரை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

கொலைக்கு பின்னர் இந்தியாவில் இருக்கும் தனது சகோதருக்கு 10 முறை போன் செய்துள்ளார் ஹர்ஷா. தங்களது மகன் இப்படி ஒரு கொலையை செய்திருக்கமாட்டான் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்