இரண்டு தீவிரவாதிகளுடன் திருமணம்...... தாய் நாட்டின் ரத்த தாகம் எடுக்கிறது: ஒரு பெண் போராளியின் பகீர் பேட்டி

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

2014 ஆம் ஆண்டு ஐஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயானா அவுஸ்திரேலிய பெண்மணி, தனது நாட்டின் ரத்த தாகம் எடுப்பதால் மீண்டும் நாட்டிற்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த Zehra Duman தனது 19 வயதில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்க வேண்டும் என ஒரு போராளியாக மாறியுள்ளார்.

போராட வேண்டும் என்ற நோக்கில் சென்ற இவர் சில காலம் கழித்து இரண்டு ஐஎஸ் தீவிரவாதிகளை திருமணம் செய்துகொண்டார். இதன் மூலம் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது சிரியாவில் உள்ள அகதி முகாமில் இருக்கும் இவர் தனது தாய்நாட்டிற்கு மீண்டும் திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Zehra Duman கூறியதாவது, நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சிரியாவில் இருந்து வந்திருக்க வேண்டியவள், ஆனால் என்னிடம் பணம் இல்லை. இங்கு அதிகம் துன்புறுத்தப்பட்டேன்.

நான் அவுஸ்திரேலிய குடிமகன் என்பதால் திரும்பி வருவதில்லை தவறில்லை, என் மீது அவுஸ்திரேலிய மக்கள் கோபத்தில் இருப்பார்கள் என்பதை என்னால் உணரமுடிகிறது, ஆனால் எனது குழந்தைகள் சாதாரண குழந்தைகள் போன்று வளர வேண்டும் என நினைக்கிறேன், அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை.

எனது நாட்டின் ரத்த தாகம் எனக்கு அதிகரித்துவிட்டது, இதனால் நாட்டுக்கு திரும்பி வருவதற்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரதமர் Scott Morrison ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், தீவிரவாத இயக்கத்தில் இணைந்து வீட்டிற்கு வர விரும்புவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவுஸ்திரேலியர்களை ஆபத்தில் சிக்க வைக்க இயலாது.

இது சோகமான ஒன்றுதான், இஸ்லாமிய அரசு அனுதாபிகள் தங்கள் குழந்தைகளை போர் பகுதிகளுக்கு இழுத்து சென்றுள்ளனர். இதனால் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டிற்கு வர விருப்பம் தெரிவிக்கும் தீவிரவாதிகள், அவுஸ்திரேலிய சட்டத்தினை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்