நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முஸ்லீம் குடியேறிகளே காரணம்: எழுந்த ஒரு இனவெறி கருத்து

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து இனவெறி ரீதியான கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய செனட்டருக்கு நேரலையில் வைத்து அவரது தலையில் முட்டை அடிக்கப்பட்டுள்ளது.

Christchurch மசூதியில் 46 முஸ்லீம் நபர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்த குயின்ஸ்லாந்து செனட்டர் Fraser Anning, இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நியூசிலாந்தில் குடியேறியுள்ள முஸ்லீம்களே காரணம் என இனவெறி ரீதியாக ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார்.

இவர் ஊடங்களிடம் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில், திடீரென வந்த இளம் வாலிபர் முட்டையை எடுத்து செனட்டரின் தலையில் அடித்துள்ளான். பதிலுக்கு செனட்டரும் அந்த வாலிபரை தாக்கியுள்ளார்.

உடனே, அங்கிருந்தவர்கள் இவரை சமாதானம் செய்தனர். செனட்டரின் இந்த இனவெறி ரீதியான கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இதுகுறித்து அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison கூறியதாவது, செனட்டரின் கருத்து மிகவும் மோசமானதாகும். இதுபோன்ற இனவெறி ரீதியான கருத்துக்களுக்கு அவுஸ்திரேலியாவில் ஒருபோதும் இடமில்லை, இது குறித்து நாடாளுமன்றத்தில் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்