20 ஆண்டுகளாக மகள்களை துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தை, உடந்தையாக இருந்த தாய்: அதிர்ச்சி தகவல்

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

தான் பெற்ற மகள்களையே ஒரு அவுஸ்திரேலிய தந்தை 20 ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்த நிலையில், அந்த பிள்ளைகளின் தாயும் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளகிய மனம் உள்ளவர்களால் தாங்க முடியாத அளவுக்கு கொடுமைகள் செய்த அந்த தந்தை மீது 87 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த பிள்ளைகளின் நலன் கருதி அந்த மனிதரின் பெயர் வெளியிடப்படவில்லை. பொலிஸ் விசாரணையில், தனது மகள்களில் ஒருவர் குறித்து தான் ஒரு கனவு கண்டதாகவும், அதில் அவள் போதைக்கு அடிமையாகவும் பாலியல் தொழிலாளியாகவும் இருப்பதைக் கண்டதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

அப்படி ஒரு வாழ்க்கையை தெரிந்தெடுத்தால், அது எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதை அவளுக்கு உணர்த்துவதற்காகவே தான் அவளுடன் பயங்கரமான முறையில் பாலுறவு கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அதிர்ச்சியூட்டும் விதமாக, அந்த பெண்களை அவர் கோரமாக துஷ்பிரயோகம் செய்வதை நன்கு அறிந்திருந்தும், அந்த பெண்களின் தாய் அதை தடுக்க எதுவும் செய்யாமல் இருந்த தகவலும் வெளியாகியுள்ளது.

சொல்லப்போனால் ஒரு முறை, அப்போது 15 வயதாக இருந்த ஒரு மகள் தந்தையால்

கர்ப்பமுற, அதை கலைப்பதற்காக அவளுக்கு 300 டொலர்கள் கடனாக கொடுத்த அந்த தாய்,

அதை அந்த சிறுமியே திரும்ப கொடுக்கச் செய்திருக்கிறாள்.

சில நேரங்களில் அந்த மகள்களில் ஒருவரை தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அந்த நபர், தனது சக ஊழியர்களை விட்டு அவளை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் அந்த பெண் வளர்ந்து திருமணமாகி அவள் கர்ப்பமாக இருக்கும்போதும், அவளது கணவன் வேலைக்கு சென்றிருக்கும் நேரத்தில், அவளை அல்லது அவள் வயிற்றில் வளரும் குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி அவளை வன்புணர்வு செய்திருக்கிறார் அந்த நபர்.

அந்த கொடூர தந்தைக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட, பார்வையாளர்கள் அமரும் இடத்தில் அமர்ந்திருந்த அவரது மகள் ஒருவர் அடக்க முடியாமல் சத்தமிட்டார்.

அந்த பெண் அவளது தந்தையால் ஏற்பட்ட பாதிப்புக்களை தனது வாழ்நாள் முழுவதும் சுமக்க வேண்டியிருக்கும் என்றார் நீதிபதி.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்