பிகினி உடையில் ஓட்டம் பிடிக்கும் அழகிய இளம்பெண்கள்: சுவாரஸ்ய வீடியோ!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

போட்டோ ஷூட் ஒன்றிற்காக பிகினி உடையில் வலம் வந்த அழகிய இளம்பெண்கள் திடீரென விழுந்தடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அவர்கள் ஓட்டத்திற்கு காரணம்?

அவுஸ்திரேலியாவில் போட்டோ ஷூட்டிற்கு புகழ் பெற்ற ’Candy Shop Mansion’ என்னும் இடத்தில் அந்த பெண்கள் போட்டோ ஷூட் ஒன்றிற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது எதிர்பாராத விதமாக கங்காரு ஒன்று அந்த இளம்பெண்களை துரத்த தொடங்கியது. வெளியாகியுள்ள வீடியோவில், கங்காருவுக்கு தப்ப ஆளுக்கொரு பக்கம் பெண்கள் ஓட, ஒருவர் அங்கிருந்த நீச்சல் குளத்திற்குள் குதிக்கிறார்.

இன்னொருவர் கையில் ஆயுதம் ஒன்று கிடைத்தும், என்ன நினைத்தாரோ தெரியாது, அதை வீசிவிட்டு ஓட்டம் பிடிகிறார்.

பின்னர் ஒருவழியாக கங்காரு அங்கிருந்து செல்ல, பிகினி உடை போட்டோ ஷூட், கடைசியில் பிகினி உடை ஓட்டப்பந்தயமாக முடிந்தது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்