இலங்கை தற்கொலைபடைதாரிகளுடன் தொடர்புடைய நபர்: அவுஸ்திரேலியாவில் கைது

Report Print Abisha in அவுஸ்திரேலியா

இலங்கை தற்கொலைபடைதாரிகளுடன் தொடர்பில் இருந்த நபர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவில் படித்தவர். இதனால் அந்நாட்டில் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணைகளைத் தொடர்ந்து தற்கொலைப்படையாக செயல்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்த நபர் ஒருவர் வடக்கு மெல்போர்ன் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்தியதில், அப்துல் லத்தீப் என்ற தற்கொலைதாரிதான், பிரித்தானியாவில் கல்வி கற்றுவிட்டு அவுஸ்திரேலியாவில் மேற்படிக்கு சென்றவன். இவன் பிரபல Taj Samudra நட்சத்திர ஹொட்டலுக்கு குறிவைத்து அது வெற்றிபெறாமல், ஹெஸ்டவுஸ் ஒன்றில் தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்தான்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்