இலங்கையில் இருந்து வெளியேற தனி விமானம்: மேலும் தாக்குதலுக்கு வாய்ப்பு என எச்சரிக்கை

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

கொழும்பு நகரில் பணியாற்றும் அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் வெளியேற தனி விமானத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தீவிரவாத தாக்குதல் மீண்டும் முன்னெடுக்கப்படலாம் என்ற எச்சரிக்கையையும் அவுஸ்திரேலிய அரசு முன்வைத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர், இலங்கையில் தற்போதுள்ள அசாதாரண சூழலை கருத்தில்கொண்டு வெளியேற முன்வரும் தூதரக அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அனைவரும் வெளியேற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை செல்ல திட்டமிட்டுள்ள பயணிகள், மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஈஸ்டர் தின தாக்குதலை முன்னிட்டு தலைநகர் கொழும்புவில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகளின் பிள்ளைகள் பெரும்பாலும் குழும்பு நகரிலேயே குடியிருக்கின்றனர்.

மட்டுமின்றி பயண கட்டுப்பாடுகளும் அமுலில் இருப்பதால், தற்போதைய சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரையில் பயணங்களை தவிர்க்க வேண்டும் என அவுஸ்திரேலிய குடிமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்