அவுஸ்திரேலிய பிரதமர் மீது முட்டை வீசிய இளம்பெண்!

Report Print Kabilan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மீது இளம்பெண் ஒருவர் முட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வருகிற 18ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. எனவே பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

அவர் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள அல்பரி என்ற இடத்தில், கிராமப்புற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 25 வயது இளம்பெண் ஒருவர், பிரதமர் மோரிசன் தலை மீது முட்டையை வீசினார்.

ஆனால், அந்த முட்டை அவரது தலையில் உடையாமல் தரையில் விழுந்து நொறுங்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த பாதுகாப்பு பொலிசார் உடனடியாக குறித்த பெண்ணை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

எதற்காக அப்பெண் பிரதமர் மீது முட்டை வீசினார் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. அதன் பின்னர், தனது அரசியல் எதிரிகள் தான் இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டதாக மோரிசன் தெரிவித்தார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்