10 லட்ச ஷூ.. 4 லட்ச பிரஷ்... 414 மில்லியன் கழிவு பொருள்: குப்பை தீவாக மாறிய பிரபல தீவு

Report Print Basu in அவுஸ்திரேலியா

இந்திய பெருங்கடலில், அவுஸ்திரேலியாவின் வடமேற்கு திசையில் 2,100 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் கோகோஸ் தீவு குப்பை தீவாக மாறியுள்ளது.

இந்த தீவிலிருந்து 9,77,000 ஷூக்கள், 3,73,000 பல் துலக்கும் பிரஷ்கள், 414 மில்லியன் கழிவு பொருட்கள் என 238 டன் எடையுள்ள குப்பைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 25 சதவீ கழிவு பொருட்கள் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் என இயற்கை அறிவியல் இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

600-க்கும் குறைவான மக்களைக் கொண்ட தீவில், அச்சமூகத்தினர் 4,000 ஆண்டுகளுக்குள் உற்பத்தி செய்யக்கூடிய கழிவுப்பொருட்களின் அளவு இதுவாகும்.

ஆலைகளால் அடித்து வரப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், சூரிய ஒளியால் சிறிய துகள்களாகி பல தசாப்தங்களாக, ஒருவேளை பல நூற்றாண்டுகளாக மண்ணுக்குள் இருக்குமாம். கடலில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது கடினம், எனவே, இனிமேல் புதிய பொருட்கள் கடலில் சேராமல் தடுப்பதே மிக முக்கயம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் தயரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் 40 சதவீதம் கழிவாக மாறுகிறது. இதில் 5.25 டிரில்லியன் பொருட்கள் கடல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது வானத்தில் உள்ள நட்சத்திரங்களை காட்டிலும் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்