அவர் அழகானவர், வலிமையானவர்: அவுஸ்திரேலிய பெண்ணின் வித்தியாசமான கணவர்!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

சமீபத்தில் திருமணமான அவுஸ்திரேலிய பெண் ஒருவர் தனது கணவர் அழகானவர், வலிமையானவர் என வர்ணிக்கிறார்...

அந்த கணவர் யார் தெரியுமா?

பிரான்சிலுள்ள ஒரு பாலம்தான் அவரது கணவர். ஆம்! பிரான்சிலுள்ள சாத்தானின் பாலம் என்று பொருள்படும் Le Pont du Diable என்ற பாலத்தைத்தான் அந்த பெண் திருமணம் செய்துள்ளார்.

சிட்னியைச் சேர்ந்த ஜோடி ரோஸ், தென் பிரான்சிலுள்ள Tech நதியின் மேல் அமைந்துள்ள பாலத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிரான்சுக்கு சுற்றுலா செல்லும்போது 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த பாலத்தின்மீது ஜோடிக்கு காதல் ஏற்பட்டதாம்.

எனவே 14 விருந்தினர்கள் முன்னிலையில் அந்த பாலத்தை திருமணம் செய்து கொண்டார் ஜோடி.

திருமணமானதற்கு அடையாளமாக தான் ஒரு திருமண மோதிரத்தை அணிந்துள்ளதோடு, அந்த பாலத்திற்கும் அதே போன்ற பெரிய அளவிலான மோதிரம் ஒன்றை அணிவித்துள்ளார் ஜோடி.

அவர் மிகவும் அழகானவர், வலிமையானவர் மற்றும் கட்டான உடல் கொண்டவர் என்று தனது கணவரை வர்ணிக்கிறார் ஜோடி ரோஸ்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்