லாட்டரியில் தனக்கு முதல் பரிசு விழுந்ததாக விளையாட்டாக கூறிய பெண்.. பின்னர் அவருக்கு காத்திருந்த ஆச்சரியம்

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் லாட்டரியில் தனக்கு பரிசு விழுந்ததாக நகைச்சுவையாக பெண் ஒருவர் கூறிய நிலையில் நிஜமாகவே அவருக்கு $1.3 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

பெர்த்தை சேர்ந்த பெண்ணொருவர் பம்பர் லாட்டரி சீட்டை வாங்கினார். இதற்கான குலுக்கல் கடந்த சனிக்கிழமை நடந்தது.

இதில் பம்பர் பரிசான $1.3 மில்லியன், வேறு நபருக்கு விழுந்ததாக அப்பெண்ணுக்கு தகவல் கிடைத்தது.

பின்னர் தான் வாங்கிய லாட்டரி சீட்டை பரிசோதித்த போது தனக்கு பரிசு விழவில்லை என அவர் நினைத்தார்.

ஆனால் நகைச்சுவையாக பலரிடம் சென்று தனக்கு முதல் பரிசு விழுந்ததாக கூறினார்.

இதையடுத்து அந்த பெண்ணின் மகன் லாட்டரி சீட்டை வாங்கி மறுபடியும் பரிசோதனை செய்த போது அந்த சீட்டுக்கு தான் முதல் பரிசு $1.3 மில்லியன் விழுந்தது தெரியவந்தது.

அவசரத்தில் அதை அப்பெண் பார்க்காமல் விட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து தாயிடம் சென்ற மகன் இது குறித்து கூற இன்ப அதிர்ச்சியடைந்தார் அப்பெண்.

தான் நகைச்சுவையாக கூறியது நிஜமாகிவிட்டதையடுத்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கே அவர் சென்றுள்ளார்.

பின்னர் அவர் கூறுகையில், பரிசாக விழுந்த பணத்தை வைத்து என் கடன்களை அடைப்பதோடு என் குழந்தைகளுக்கு அதை செலவழிப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்