தேர்தல் முடிவுகள் எதிரொலி: கொத்துக் கொத்தாக தற்கொலை செய்துகொள்ளும் அகதிகள்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அங்குள்ள அகதிகள் பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பப்புவா நியூ கினி அருகே அமைந்துள்ள மணஸ் தீவு தடுப்பு மையத்திலேயே இந்த தற்கொலை முயற்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சனிக்கிழமை அன்று தேர்தல் முடிவுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் ஒன்பது அகதிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதில் 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

பப்புவா நியூ கினி அருகே அமைந்துள்ள தீவில் சுமார் 1000 அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அவுஸ்திரேலிய அரசிடம் அடைக்கலம் கோரி விண்ணப்பித்து காத்திருப்பவர்களாகும்.

குறித்த தீவுகளில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகளின் நிலை மிகவும் பரிதாபம் எனவும், பலர் துஸ்பிரயோகங்களுக்கு இரையாவதாகவும், அரசு கண்டுகொள்வதில்லை எனவும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் போன்ற மனித உரிமை கண்காணிப்பாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

தற்போது லிபரல் கட்சி தேசிய கூட்டணி அசுர பலத்துடன் வெற்றிபெற்றுள்ளதால் அகதிகளின் கனவுகள் அனைத்தும் தவிடுபொடியாகியுள்ளது.

இதனாலையே அகதிகள் பலரும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணஸ் தீவு தடுப்பு மையத்தில் 7 பேரும் போர்ட் மோர்ஸ்பி தடுப்பு மையத்தில் இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதில் மணஸ் தீவு தடுப்பு மையத்தில் ஈரானியர் ஒருவர் ஈராக்கியர் ஒருவரும் தற்கொலைக்கு முயன்றவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

பப்புவா நியூ கினியை பொறுத்தமட்டில் தற்கொலைக்கு முயற்சிப்பது குற்றச்செயலாகும். மட்டுமின்றி தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தால் நவூரு தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் 150 பேரை நியூசிலாந்துக்கு அனுப்பும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தனர்.

இது அகதிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது மட்டுமின்றி, தொழிலாளர் கட்சியால் தங்கள் வாழ்க்கை ஏற்றம்பெறும் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்