நாட்டிற்கு பாரம் என்பதால் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட பிரித்தானிய மூதாட்டி மரணம்!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த ஒரு மூதாட்டி நாட்டிற்கு பாரம் என்பதால் நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியாவுக்கு செல்ல உத்தரவிடப்பட்டிருந்தார்.

தனது குடும்பத்துடன் வாழ்வதற்காக பிரித்தானியாவிலிருந்து 11 ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியாவிற்கு சென்றார் Mollie Manley (93).

ஆனால் கடந்த சில வருடங்களாகவே அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் காப்பகம் ஒன்றில் அனுமதிக்கப்பட்ட Mollieக்கு கண் பார்வை பறிபோனதோடு அவர் படுத்த படுக்கையானார்.

இந்த நிலையில் அவரது நிரந்தர விசாவிற்கான விண்ணப்பம் அவரது உடல் நிலையைக் காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டது.

மே மாதம் 13ஆம் திகதி அவுஸ்திரேலிய அரசு Mollieக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி அவர் 28 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியாவுக்கு செல்ல வேண்டும் என உத்தரவிட்டது.

ஒருவேலை அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழலும் ஏற்பட்டது.

பின்னர் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பால் அரசின் முடிவு மாற்றிக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் Mollie நேற்று காலை மரணமடைந்தார்.

Mollieயின் மருமகனான Rob Rowe, என்றைக்கு தனது மாமியார் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டாரோ, அன்றிலிருந்தே அவரது உடல் நிலை மோசமாகத் தொடங்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.

அவரை அவுஸ்திரேலிய அரசு நடத்திய விதத்தை வன்மையாக கண்டித்துள்ள Rob Rowe, இன்னொரு குடும்பம் இதேபோல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அந்த சட்டத்தை மாற்ற போராடப்போவதாக கூறியுள்ளார்.

தனக்கு விசா கிடைக்கவில்லை என்பதால் ஏற்பட்ட மன அழுத்தம்தான் தனது மாமியாரின் மரணத்திற்கு காரணம் என்று தான் கூறவில்லை என்று கூறும் Rob Rowe, அதுவும் அவரது உடல் நிலை மோசமாவதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றே தான் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்