சாதாரண லொறி ஓட்டுனருக்கு கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டம்... என்ன தெரியுமா?

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் டிரக் லொறி ஓட்டுனருக்கு லொட்டரியில் $200,000 பரிசு விழுந்த நிலையில் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ரெட்லாண்ட்ஸை சேர்ந்த நபர் ஒருவர் டிரக் லொறி ஓட்டுனராக உள்ளார்.

சாதாரண வருமானத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்த அவருக்கு லொட்டரி டிக்கெட்கள் வாங்கும் பழக்கம் இருந்தது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் வாங்கிய லொட்டரிக்கு பம்பர் பரிசு $200,000 விழுந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், பரிசு விழுந்த தகவல் கிடைத்ததில் இருந்து என் உடல் நடுங்குவது இன்னும் நிற்கவில்லை, பரிசு விழுந்துள்ளதை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை.

பரிசு பணத்தை வைத்து முதலில் சில பில் கட்டணங்களை கட்டுவேன், இதன்பின்னர் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வேன் என கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers