பல கருச்சிதைவுகளுக்கு பின் பிறந்த ஆசை மகள்: நள்ளிரவில் சடலமாக மீட்ட பொலிஸார்

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் வீட்டிலிருந்து மாயமான் மூன்று வயது சிறுமி நீண்ட நேர தேடுதலுக்கு பின் அணைக்கட்டுக்கு அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அவுஸ்திரேலியாவின் நூசாவுக்கு அருகிலுள்ள கூத்தராபாவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து எலெனோர் அல்லது எல்லி என்கிற சிறுமி திடீரென மாயமாகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதும், ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிரமாக தேடுதல் வேட்டை ஆரம்பமானது.

அவரது உறவினர்கள் பலரும் பேஸ்புக் பக்கத்தில் உதவி கேட்டதை அடுத்து, தன்னார்வாளர்களும் அப்பகுதியில் குவிந்து சிறுமியை தேட ஆரம்பித்தனர்.

8 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் நள்ளிரவில் சிறுமியின் வீட்டிலிருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு அணைக்கட்டு பகுதியில் நீச்சல் வீரர்கள் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமி குறித்து அவருடைய அத்தை கூறுகையில், நீண்ட நேரமாக எலெனோர் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய அம்மா சமயலறைக்கு சென்றிருந்த போது தான் திடீரென மாயமாகியிருக்கிறாள். எங்களுடைய குடும்பத்தினர் சுற்றியுள்ள பகுதியில் தேடிப்பார்த்து விட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்தோம்.

அவள் எப்பவுமே மகிழ்ச்சியாக இருப்பாள். அவளுடைய அம்மாவிற்கு குழந்தையே இல்லாமல் தொடர்ச்சியாக பல கருச்சிதைவுக்கு பின்னர் பிறந்தவள் எலெனோர் என வேதனை தெரிவித்துள்ளார்.


மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்