600 கிலோ எடையுள்ள பசுவை வாயில் கவ்வி இழுத்து சென்ற முதலை: வெளியான வீடியோ!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

முதலை ஒன்று, 600 கிலோ எடையுள்ள ஒரு முழு பசுவை தனது வாயில் கவ்வி இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவிலுள்ள King River என்னும் நதியின்மீது பறந்து செல்லும் ஹெலிகொப்டரிலிருந்து இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

தண்ணீர்க் குழாய்களை பழுது பார்ப்பவரான Mick Estens என்பவர், தனது பணி நிமித்தமாக நதியின் மீது ஹெலிகொப்டரில் பயணிக்கும்போது இந்த காட்சியை பதிவு செய்துள்ளார்.

Katherine Bridge என்ற இடத்திலிருந்து 25 கிலோமீற்றர் தூரத்திற்கு, ஓடும் நதி நீரை எதிர்த்து, அந்த பசுவை அந்த முதலை இழுத்தபடி நீந்தி வந்துள்ளது.

அதுவும் அந்த முதலை இழுத்து வந்த Brahman வகை பசுக்கள் 600 கிலோ முதல் 1,100 கிலோவரை இருக்கும்.

நல்லவேளை அது தனது பசியைத் தீர்க்க ஒரு பசுவை தேர்ந்தெடுத்தது, என்னைப்போல தண்ணீர்க் குழாய்களை பழுது பார்க்கும் ஒருவரை இழுத்துச் செல்லாதவரை சந்தோஷம்தான் என்கிறார் Estens.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...