கண்முன்னே குத்திக்கொலை செய்யப்பட்ட தாய்... சடலம் அருகே அழுதுகொண்டிருந்த சிறுவன்

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் மகனின் கண்முன்னே தாய் கத்தியால் குத்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த 36 வயது பெண் சமீபத்தில் தன்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

இந்த நிலையில் அவர் தன்னுடைய 8 வயது மகனுடன் காரில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 46 வயதுடைய அவரது முன்னாள் கணவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை குத்திகொலை செய்துள்ளார்.

9news

பின்னர் அந்த கத்தியை சிறுவனை நோக்கி நீட்டிவிட்டு, தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

பயத்தில் அலறியபடியே அந்த சிறுவன் மட்டும் காருக்குள், தாயின் சடலத்துடன் இருந்துள்ளான். இதற்கிடையில் சம்பவம் அறிந்து விரைந்த பொலிஸார், காருக்குள் இருந்த சிறுவனை பத்திரமாக மீட்டெடுத்ததனர். மேலும், காருக்குள் இருந்த தாயிடம் சடலத்தையும், வெளியில் கிடந்த குற்றவாளியின் சடலத்தையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers