கணவன் இன்னும் ஐந்து ஆண்டுகள்தான் உயிர் வாழ்வார் என்று தெரிந்ததும் மனைவி செய்த மோசமான செயல்!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன, இன்பத்திலும் துன்பத்திலும், மரணம் நம்மைப் பிரிக்கும் நாள் வரையிலும் இணைந்தே இருப்போம் என்றெல்லாம் திருமணங்களில் கூறப்படுவதுண்டு.

ஆனால் துன்பம் வந்ததும் ஒரு பெண் தனது கணவனை கைவிட்டதைக் குறித்த ஒரு செய்தி இது.

மனைவியையோ மகனையோ குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல் 30 ஆண்டுகளாக சிகரெட் பிடித்து வந்த ஒரு கணவனுக்கு, திடீரென ஒருநாள் கடுமையான இருமல் ஏற்பட்டிருக்கிறது.

அந்த அவுஸ்திரேலிய மனைவி கணவனை மருத்துவரிடம் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்ல, அவருக்கு ஒரு அதிர்ச்சி தரும் செய்தி காத்திருந்தது.

அது, அந்த கணவர் இன்னும் ஐந்து ஆண்டுகள்தான் உயிருடன் இருப்பார் என்பதுதான். மற்ற மனைவிகள் ஒரு வேளை சொட்டுக்கண்ணீராவது வடித்திருப்பார்கள், இந்த பெண் வேறொரு காரியம் செய்தார்.

இனி இவருடன் வாழ்வதில்லை என முடிவெடுத்தார் அந்த பெண். தங்கள் மகனின் நலன் கருதி ஒரே வீட்டிலிருந்தாலும், தங்களுக்குள் உடல் ரீதியான உறவு எதுவும் இல்லை என்றும், வெவ்வேறு அறைகளில்தான் தாங்கள் தூங்குவதாகவும் கூறியுள்ளார் அந்த பெண்.

மற்றவர்கள் என்னை சுயநலம் பிடித்தவள் என்று கூறினாலும் பரவாயில்லை, நான் இனி எனக்கென வாழ்வது என முடிவு செய்துள்ளேன் என்கிறார் அவர்.

மற்றவர்களைக் குறித்து சற்று கவலைப்படாமல், தான் இன்னும் ஐந்தாண்டுகள்தான் உயிர் வாழ்வேன் என்று தெரிந்தும், கடைசி வரை சிகரெட் பிடித்துக் கொண்டே சாகிறேனே என்று சிரித்துக்கொண்டே கூறும் ஒரு நபரைக் குறித்து இனி நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கப்போவதில்லை என்கிறார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்