பொம்மை போல் படுத்திருந்த கொடிய விஷ பாம்பு.. குழந்தையை காப்பாற்ற ஓடிய கர்ப்பிணி தாய்: சிலிர்க்க வைக்கும் காட்சி

Report Print Basu in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் குழந்தை விளையாட்டு பொருளில் பொம்மை போல் மறைந்திருந்து கொடிய விஷ பாம்பை கண்டு கர்ப்பிணி பெண் பயந்து ஓடியுள்ளார்.

Adelaide-யில் பகுதியிலே உள்ள ஒரு வீட்டிலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது 8 மாத கர்ப்பிணியும், அவரது இரண்டு வயது குழந்தையும் பொம்மைகளுடன் விளையாட அறைக்குள் சென்றுள்ளனர்.

அப்போது, கால்பந்திற்கும் காருக்கும் நடுவில் பாம்பு ஒன்று மறைந்திருப்பதை கண்ட கார்ப்பிணி பெண், குழந்தையை துக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

இதனையடுத்து, அவரின் மாமியார் பாம்பு பிடிக்கும் Steve Brown-ஐ அழைத்துள்ளார். சம்பவயிடத்திற்கு விரைந்த அவர் லாவகமாக பாம்பை பிடித்து பையுக்குள் அடைத்தார்.

அது சிறிய pygmy copperhead பாம்பு, இது மிகவும அரிதான பாம்பு, ஆனால், கொடிய விஷம் உடையது. இந்த வகை பாம்புகள் அதிகமாக மலை அடிவாரத்தில் இருக்கும் என Steve Brown கூறினார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்