மாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மருத்துவர்கள் சொன்ன தகவல்: புகைப்படம்

Report Print Santhan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் மாதவிடாய் காரணமாக வயிறு வலிப்பதாக நினைத்து மருத்துவமனைக்கு சென்ற பெண், மருத்துவர்கள் சொன்ன தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்தவர் Caity Mason. 25 வயதான இவர் இந்த ஆண்டின் துவக்கத்தில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அவர் மாதவிடாய் காரணமாக வயிற்று பிடிப்பு அல்லது வலி இருக்கலாம் என்று எண்ணி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கோ அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள், குழந்தை 10 செ.மீற்றருக்கு மேல் வளர்ந்துவிட்டது, எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம் என்ற தகவலை கூற, இதைக் கேட்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின் இந்த ஆண்டு ஜனவரி 23-ஆம் திகதி அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், இதை கேட்டவுடன் நான் அதிர்ச்சியடைந்தேன், இதற்கு தந்தை யார் என்று எனக்கு தெரியும், ஆனால் நான் இப்போது அதை கூற விரும்பவில்லை.

ஒவ்வொரு மாதமும் நான்கு நாட்கள் எனக்கு மாதவிடாய் சரியாகவே சென்றது, எனக்கு எந்த ஒரு உடல்நிலையும் சரியில்லாமல் போகவில்லை, குழந்தை பிறக்கப்போகிறது என்றால், உடலில் மாற்றம் தெரியும் என்று கூறுவார்கள்.

ஆனால் எனக்கு என்னுடைய உடலில் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லை, நான் என்ன உடை அணிவேனோ அதே உடைகள் தான் அணிந்திருந்தேன்.

Caity Mason Credit: The Sunday Project/Network 10

மது அருந்தியிருக்கிறேன், நிறைய விளையாடியிருக்கிறேன், புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தில் அதிகம் ஆட்டம் போட்டிருக்கிறேன், அதாவது கடற்கரைக்கு செல்வது, நண்பர்களுடன் இருப்பது போன்றவையை கூறுகிறேன்.

Credit: The Sunday Project/Network 10

வலைப் பந்து நிறைய விளையாடியிருக்கிறேன், நான் இந்த விஷயத்தை அறிந்து 24 மணி நேரத்திற்குள் குழந்தை பெற்றெடுத்துவிட்டேன் என்று தான் சொல்வேன், செவ்வாய் கிழமை காலை 1.30 மணிக்கு நான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிகிறது, அடுத்த நாள் புதன் கிழமை எனக்கு குழந்தை பிறந்துவிட்டது.

Credit: The Sunday Project/Network 10

இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், சிலவற்றை செய்ய தவறிவிட்டேன் என்று நினைக்கும் போது கவலையாக இருக்கிறது. வழக்கமாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் செய்யும் சோதனைகள், வயிற்றில் இருக்கும் குழந்தையின் நடவடிக்கைகள் பார்க்க தவறிவிட்டேன்.

ஒன்பது மாதம் எதுவும் தெரியாமல் இருந்திருக்கிறேன், ஏதோ ஒரு காரணத்திற்காகவே இது நடந்திருக்கிறது. ஆனால் என்னுடைய வாழ்க்கையில் இப்போடு அழகான ஒரு ஆண் குழந்தை இருக்கிறது அது மட்டும் உண்மை, இது போதும் எனக்கு என்று கூறியுள்ளார்.

Credit: The Sunday Project/Network 10

பொதுவாக 450 கர்ப்பிணி பெண்களில் 1 ஒருவருக்கு தன்னுடைய 20-வது வாரத்தில் தான் கர்ப்பமாக இருப்பது தெரிய வரும் எனவும் 2500 பேரில் ஒருவருக்கு தான் கர்ப்பமாக இருப்பதையே உணர்வதில்லை என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்