சிக்னலிலிருந்து புறப்பட்ட பொலிஸ் வாகனம்: பின்னால் வந்த கார் கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

Report Print Balamanuvelan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் சிக்னலில் நிற்கும் பொலிஸ் வாகனம் ஒன்று புறப்பட, அதனுள்ளிருந்து கைகளில் மாட்டிய விலங்குடன் கைதி ஒருவர் தப்பும் பரபரப்பு காட்சி ஒன்று பின்னால் வந்த காரின் கமெராவில் சிக்கியது.

கடந்த புதன்கிழமை ஆயுதங்களுடன் West Perthஇல் கொள்ளையடித்த Ali Hood (31) என்ற நபரை பிடிக்க பொலிசார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். ஒரு வழியாக நேற்று அவர் பொலிசாரிடம் சிக்கினார்.

அவரை கைது செய்து கைவிலங்கிட்டு பொலிஸ் வாகனம் ஒன்றில் அழைத்துச் சென்றுள்ளனர் பொலிசார்.

ஆனால், ஒரு சிக்னலில் நிற்கும்போது, அந்த பொலிஸ் வாகனத்தின் கதவு திறக்க, அதிலிருந்து Ali உருண்டு விழும் காட்சி, பின்னால் வந்த கார் ஒன்றின் டேஷ்காம் கமெராவில் சிக்கியுள்ளது.

அந்த வீடியோவை சமூக ஊடகம் ஒன்றில் பதிவேற்றம் செய்த காரின் உரிமையாளர்கள், வீடியோவின் கீழ், கார் கதவை பொலிசார் பூட்ட மறந்து விட்டனர் என்று குறிப்பிட்டிருந்தனர்.

சில மணி நேரத்திற்குள், 163,000க்கும் அதிகமான பேரால் பார்க்கப்பட்டது அந்த வீடியோ.

அதற்குப் பின், பொலிசார் அவரை துரத்துவதையோ, மீண்டும் கைது செய்வதையோ பார்க்க முடியாதது துரதிர்ஷ்டவசம்தான் என்றும் அந்த வீடியோவின் கீழ் குறிப்பிட்டிருந்தனர் அதை பதிவேற்றம் செய்தவர்கள்.

ஆனால், அந்த பொலிஸ் வாகனத்திலிருந்து தொப் என்று ஒரு சத்தம் கேட்டதாகவும், இறங்கிப் பார்க்கும்போது, Ali தப்பியோடுவதைக் கண்டு அவரைத் துரத்தியதாகவும், 150 மீற்றர் தூரம் ஓடி குற்றவாளியை பிடித்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்