விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டேன்... என்ன நடந்தது? பிரபல நடிகை புகைப்படத்துடன் விளக்கம்

Report Print Santhan in அவுஸ்திரேலியா
490Shares

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல நடிகை, விமானநிலையத்தில் நான் அவமானப்படுத்தப்பட்டேன் என்று கூறிய நிலையில், அதற்கு விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

செரா நேதன் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவரான இவர், சமீபத்தில் மெல்போர்ன் செல்வதற்காக சிட்னி விமானநிலையத்தில் காதலனுடன் காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு பக்கத்தில் ஏராளமான இருக்கைகள் காலியாக இருந்தன. ஆனால் அவர் அந்த இருக்கையில் அமராமல், தன் காதலரின் மடியில் அமர்ந்த படி பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இதைக் கண்ட விமானநிலைய அதிகாரிகள், இங்கு குழந்தைகள் எல்லாம் இருக்கின்றனர். இப்படி இருக்க வேண்டாம், தனி இருக்கையில் அமருங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் அவர் கேட்காமல் தொடர்ந்து அப்படியே இருந்ததால், விமான ஊழியர்கள் தங்கள் தலைவரை அழைத்து வந்துள்ளனர்.

அவரும் அவர்கள் சொன்னதையே கூறியிருக்கிறார், நீங்கள் இப்படி அமர்ந்ததன் மூலம் இங்கிருக்கும் பெற்றோரை அவமதிக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

அதோடு மட்டுமின்றி, செரா டிராக் பேன்ட்டும் கிராப் டாப்பும் அணிந்திருந்தார். இதைக் கண்ட அவர், இந்த உடையை அணிந்து கொண்டு விமானத்தில் பயணிக்க முடியுமா? என்ற சந்தேகம் இருக்கிறது.

இதனால் நீங்கள், போர்டிங் நுழைவாயிலிலிருந்து எழுந்து காத்திருப்பு அறைக்குச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த நிகழ்வு குறித்து விமானநிறுவனத்திற்கு பயணிகளை இது போன்று தான் நடத்துவீர்களா? என்று புகார் அனுப்பியுள்ளார்.

அந்த புகாருக்கு விமானநிறுவனம், உங்களைத் தரக்குறைவாக நடத்தியதற்கு வருந்துகிறோம். பொது இடத்தில் காதலர் மடியில் அமர்வது சரியில்லை என்று ஊழியர்கள் கருதியுள்ளனர். அதன் காரணமாகவே உங்களை அருகிலுள்ள நாற்காலியில் அமரச் சொல்லியிருக்கிறார்கள். சக பயணிகளைக் கருத்தில்கொண்டு இதைக் கூறியுள்ளனர்.

நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்களின் காதலன் மிகவும் அதிர்ஷ்டசாலி. அந்த நேரத்தில் நீங்கள் தரக்குறைவான செயலில் ஈடுபடவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதுபோன்ற செயல்கள் தனிப்பட்ட இடத்தில் மட்டுமே நடக்க வேண்டும். உங்களைத் தரக்குறைவாக விமர்சித்ததற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக, அவரின் ஆடை விஷயத்திற்கு மட்டும் ஆதரவு கிடைத்துள்ளது, ஆனால் அவர் விமானநிலையத்தில் நடந்து கொண்ட விதம் குறித்து பலரும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்