குழந்தைகளை காரில் மறந்துவிட்டு உறங்க சென்ற தாய்: திரும்பி வந்த போது காத்திருந்த சோகம்

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் தாயின் கவனக்குறைவால் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக கார் வெப்பத்திற்கு பலியாகியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த Kerri-Ann Conley (27) என்கிற தாய், நேற்றைய தினம் தன்னுடைய இரண்டு குழந்தைகளான டார்சி கான்லி (2) மற்றும் சோலி-ஆன்(1) ஆகியோரை 31 செல்சியஸ் வெப்ப நிலையில் காரில் மறந்துவிட்டு வீட்டிற்கு சென்று உறங்கிவிட்டார்.

நீண்ட நேர உறக்கத்திற்கு பின்னரே இரண்டு குழந்தைகளும் காரில் இருப்பது Conley-ன் நினைவுக்கு வந்துள்ளது. வேகமாக காருக்கு சென்ற அவர், இரண்டு குழந்தைகளும் சுயநினைவிழந்து கிடப்பதை பார்த்து ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

மேலும், குளிர்ந்த நீரால் இரண்டு குழந்தைகளையும் நனைத்து உயிருடன் மீட்க போராடியுள்ளனர். இதற்கிடையில் விரைந்த வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், Conley-ஐ கைது செய்து சம்பவம் நடைபெற்ற போது அவர் போதை மருந்து உட்கொண்டிருந்தாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்